உலகம்
102 ஆண்டுகளுக்கு முன்பே மாஸ்க் அணிய வலியுறுத்திய ரெட் கிராஸ் அமைப்பு..!
102 ஆண்டுகளுக்கு முன்பே மாஸ்க் அணிய வலியுறுத்திய ரெட் கிராஸ் அமைப்பு..!
102 ஆண்டுகளுக்கு முன்பே முகக் கவசம் அணிய வலியுறுத்திய விழிப்புணர்வு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1918-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் உலக நாடுகளை முடக்கிப் போட்டிருந்தது. உலகம் முழுவதிலும் இக்காய்ச்சலுக்கு சுமார் 5 கோடிப் பேர் மரணமடைந்தனர். இந்த சமயத்தில் மனித நேய உதவி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மக்களை முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியது.
‘முகக் கவசம் அணிந்து உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்’ என அந்த விழிப்புணர்வு பிரசுரம் கூறுகிறது. முகக் கவசம் அணிவதன் மூலம் மக்கள் தங்களை மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளையும், மற்றவர்களையும் எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதை அந்த பிரசுரம் விவரிக்கிறது. ‘முகக் கவசம் அணியுங்கள்’ என்று மற்றொரு நினைவூட்டலுடன் முடிகிறது.
102 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அந்த பிரசுரத்தை பகிர்ந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ‘’நாங்கள் அதை 1918-ஆம் ஆண்டிலும் சொன்னோம். 2020-ம் ஆண்டிலும் சொல்கிறோம்" என்று கூறினர்.