’வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ - விளம்பரம் செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

’வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ என விளம்பரம் கொடுத்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
china model house
china model housetwitter

கால மாற்றத்தில் எதையும் வித்தியாசமாகச் செய்யப்படும்போதுதான் அதற்கு மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. குறிப்பாக, வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கில் சில நிறுவனங்கள் ஏமாற்று மோசடி வழிகளில் செயல்படுகின்றன. அதற்குக் கவர்ச்சியான விளம்பரங்களையும் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவிடுவர். இப்படியான, சம்பவம் ஒன்றுதான் சீனாவில் நடைபெற்றுள்ளது.

உலகிம் முழுவதும் பொருட்கள் அல்லது பிற நிலம் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய விளம்பரங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், விளம்பரங்களில் இலவச சலுகைகளை அறிவித்து, அதன்மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து நிறுவனங்கள் பயன்பெறுகின்றன.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களைக் கவர நினைத்தது. ஆனால், அது வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, அரசையும் கலக்கமடையச் செய்துள்ளது.

இதையும் படிக்க: ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

சீனாவின் டிரையஜின் (Tianjin) என்ற நகரைச் சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, 'தங்களிடம் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாகப் பெறுங்கள்' என்று விளம்பரம் கொடுத்துள்ளது.

தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மற்றும் சுவர் போஸ்டர்களில் இந்த விளம்பரம் தோன்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுத்துள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த விளம்பரம் இருக்கும் என நினைத்த அந்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்ப்புகள்தான் வந்துள்ளன.

இந்த விளம்பரத்தை பார்த்த மக்கள், ’வீடு வாங்கினால் மனைவி இலவசமா’ என கோபமடைந்தனர். இதனால் விஷயம் சீரியஸாய்ச் சென்றதையடுத்து, அந்த விளம்பரத்தைக் கொடுத்த நிறுவனத்தின்மீது, சீன அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

எனினும், அந்த ரியல் நிறுவனம் ’இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளது. அதாவது, ’தங்கள் முயற்சியில் வீடு வாங்கி... உங்கள் மனைவிக்குக் கொடுங்கள்’ என்ற அர்த்தத்தில்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தோம் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் முதல்முறை: நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.. ஏன், எதற்காக, எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com