“வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார், ஆனால் ஒரு கண்டீஷன்” - ட்ரம்ப்

“வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார், ஆனால் ஒரு கண்டீஷன்” - ட்ரம்ப்
“வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார், ஆனால் ஒரு கண்டீஷன்” - ட்ரம்ப்

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ளார். பைடனின் வெற்றியின் மூலம் தனது அதிபர் பதவியை இழந்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதையடுத்து ‘எப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ளீர்கள்?’ என நிருபர்கள் கேட்க, ‘விரைவில் வெளியேறுவேன், ஆனால் ஒரு கண்டீஷன்’ என சொல்லியுள்ளார் ட்ரம்ப்.

அந்த கண்டீஷன் என்ன?

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேட்டில் ஈடுபட்டே வெற்றி பெற்றது என குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப். அதனை நிரூபிக்க சட்டப்போராட்டம் தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் ட்ரம்ப்.

“பைடனை எலெக்ட்டோரல் காலேஜ் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக அறிவித்தால் நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயார்” என பத்திரிகையாளர்களிடம் சொல்லியுள்ளார் ட்ரம்ப். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com