`ரெண்டுமே இல்லை… மக்களுக்கு சாப்பாடு!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

`ரெண்டுமே இல்லை… மக்களுக்கு சாப்பாடு!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
`ரெண்டுமே இல்லை… மக்களுக்கு சாப்பாடு!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 9-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘மகிந்த ராஜபக்சே ராஜினாமா… தேவை உடனடித் தேர்தலா? தேசிய அரசாங்கமா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
இலங்கை அதிபர் உடனே பதவி விலகவேண்டும்! இலங்கையின் தற்போதைய பிரதான தேவை, நாட்டின் அரசு நிர்வாகக் குழுவும், பொருளாதார வல்லுநர் கமிட்டியும்தான்! மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், மின் விநியோகத்தையும் சீர்படுத்தி, உள்நாட்டு உணவு உற்பத்தி விவசாயத்தை புனரமைக்க வேண்டும்!

இதையும் படிங்க... கடலூர்: வீட்டு மாடியில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு

Maria Anton de IHS

ரெண்டுமே இல்லை. மக்களுக்கு சாப்பாடு

Nellai D Muthuselvam
இலங்கையின் தற்போதைய பிரச்சனை அரசியல் இல்லை. பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனை . மகிந்த ராஜபக்சவின் இனவாத கோஷம் இலங்கை பொருளாதாரம் வீழ ஒரு காரணம். சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்ட அவப்பெயர் இன்னும் நீங்க வில்லை. பொருளாதார வீழ்ச்சியும் ஒரு தேசிய பேரிடர் தான். பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஒரு நாட்டிலோ, மாநிலத்திலோ நடக்கும்போது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து கட்சி பங்களிப்புடன் கூடிய கூட்டு அரசு அமைவது முழுமையான ஜனநாயகம் உருவாக வழி பிறக்கும். இலங்கை ஒரு அமைதியான தேசமாக மாற கடந்த கால தவறுகளை சரி செய்ய வேண்டும்.



இனவாதத்தை ஓங்கி பேசும் அரசுகளால் இதை சாதிக்க இயலாது. தேசிய சிந்தனையில் நிற்கும் அரசால் தான் இலங்கையின் நன்மதிப்பை மீட்க இயலும். ஒற்றுமைக்கு என்றும் சக்தி அதிகம். இறைவனும் இயற்கையும் தந்த வாய்ப்பை இலங்கை மக்கள் பயன்படுத்தி ஓரணியில் நிற்க வேண்டும். இனவேறுபாடுகளை ஓரம்கட்டி ஒற்றுமையாக உழைத்த காரணத்தால் மலேசியா , சிங்கப்பூர் தேசங்கள் உயர்ந்தன.

Micheal Deesan

தேர்தல் நடத்த நிதியிருப்பு இல்லை... தேசிய அரசாங்கம் அமைக்க எதிர்க் கட்சியிடம் பெரும்பான்மையும் இல்லை. வாய்ப்பு வந்த போதும் பயன்படுத்த தெரியவில்லை. இப்போதைக்கு இடைக்கால அரசாங்கமும், மேற்குலக நாடுகளின் உதவியுமே தேவை... தலையில் நிறுத்தி கொண்டாடப்பட்ட தலைமைகளின் வீடுகள் தீக்கிரை. பாராளுமன்றம் மூலம் தற்காலிகமாக ஜனாதிபதியை நியமிக்க முடியும்.தற்போதைய ஜனாதிபதி பதிவு விலகினால்...

heyy_this_is_queen_

ஒரு நாட்ட எப்படிலாம் ஆக்கிட்டாங்க? சரியான தலைவன் இல்லைன்னா இப்படித்தான் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com