தங்கம்
தங்கம்முகநூல்

உலக வங்கியில் பல டன் தங்கத்தை கூடுதலாக இருப்பு வைத்த ஆர்பிஐ - உலக தங்க கவுன்சில் கொடுத்த தகவல்

அமெரிக்க தேர்தலை ஒட்டி, தங்கத்தின் விலையானது குறைந்தது. அத்தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட உலக மத்திய வங்கிகள் மொத்தமாக 52 டன் தங்க இருப்பை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Published on

உலகெங்கிலும் இருக்கும் மத்திய வங்கிகளின் தங்க இருப்பு சேர்ப்பை கண்காணிக்கும் உலக தங்க கவுன்சில் (World Gold Council) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,

தங்கம் விலை
தங்கம் விலை

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தலை ஒட்டி, தங்கத்தின் விலையானது குறைந்தது. அத்தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட உலக மத்திய வங்கிகள் மொத்தமாக 52 டன் தங்க இருப்பை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. இதில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி RBI மட்டும் சுமார் 8 டன் தங்கத்தை தங்க இருப்பில் சேர்த்துள்ளதாக WGC தெரிவித்துள்ளது.

2024 இல் தங்கத்தை வாங்கிய வங்கிகள் அதன் கையிருப்பு

WGC இன் தரவுகளின்படி, நேஷனல் பாங்க் ஆஃப் போலந்து (NBP) 90 டன்கள் தங்கத்தை வாங்கி தங்கத்தின் கையிருப்பை 448 டன்களாக உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் RBI, 73 டன் தங்கத்தை வாங்கி தங்கத்தின் கையிருப்பை 876 டன்னாக உயர்த்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் உஸ்பெகிஸ்தானின் 11 டன்கள் தங்கத்தை வாங்கி தங்க இருப்பை 382 டன்களாக உயர்த்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

நேஷனல் பேங்க் ஆஃப் கஜகஸ்தான் 5 டன்கள் தங்கத்தை அதிகரித்து மொத்தமாக 295 டன் தங்கம் கையிருப்புடன் அதிக தங்கத்தை வாங்கும் வங்கிகளின் ஒன்றாக உள்ளது.

அடுத்ததாக சீனா 6 மாத இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளது. ஆண்டு முதல் நிகர கொள்முதல் 34 டன்களாகவும், அதன் மொத்த தங்கம் கையிருப்பு 2,264 டன்களாகவும் அதிகரித்துள்ளது என்று WGC கூறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com