
முழு சூரிய கிரகணம் இன்று காலை நிகழவுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா தீவு நாடுகளில் மட்டுமே பார்க்க முடியும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘நிங்கலூ’ (Ningaloo) எனும் இந்த அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இன்று காலை நிகழ உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக தோன்ற உள்ளது.
வானத்தில் சில நிமிடங்களுக்கு முழு இருளையும், நெருப்பு வளையத்தையும் இது கொண்டு வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய நேரப்படி, இன்று காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணிக்கு இது முடிவடைகிறது. கிட்டத்தட்ட இந்த கிரகணம் 5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடிக்கிறது. சூரிய கிரகணத்தை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் இந்த கிரகணத்தை சிறப்பாகப் பார்க்க முடியும். மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடற்கரை வழியே நிலவின் நிழல் கூம்பு செல்வதால் அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிடம் மட்டுமே முழு சூரிய கிரகணம் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தைவான் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பகுதி அளவு பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி நிகழவுள்ளது.