ஆஸ்திரேலியாவிலுள்ள தேசியத் திரைப்பட மற்றும் ஒலி காப்பகம் (என்.எஃப்.எஸ்.ஏ) அமைப்பு அறியப்பட்ட தைலாசின் அல்லது டாஸ்மேனியா புலி என்ற அரியவகை இன உயிரினம் ஒன்றின் வீடியோ பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 21 விநாடிகள் ஓடக்கூடிய கறுப்பு, வெள்ளையிலான அந்தப் பதிவு 1935 ஆம் ஆண்டில் டாஸ்மேனியா தி ஒண்டர்லேண்ட் என்ற பயணக் குறிப்பிற்காகப் படமாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் இந்த வீடியோவை பெஞ்சமின் என்பவர் இதனைக் காட்சியாகப் பதிவு செய்துள்ளார். டாஸ்மேனியா அருகே இருக்கும் ஹோபார்ட்டிலுள்ள பெளமாரிஸ் மிருகக்காட்சி சாலையில் சுற்றித் திரிந்த அந்த அரியவகைப் புலிதான் இந்த வீடியோவில் உள்ளது என சி.என்.என் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.