வலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்!

வலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்!

வலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்!
Published on

இளம் அமெரிக்க ராப் பாடகர் வலிப்பு நோயால் உயிரிழந்தார்

அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதான ராப் பாடகர் ஜரத் எ கிக்கின்ஸ். இவர் Juice WRLD என்று அழைக்கப்படுவார். 'All Girls Are the Same' , 'Lucid Dreams' உள்ளிட்ட பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர். இவர் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோவின் மிட்வே விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். 

உடனடியாக  விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். மேலும் ராப் பாடகரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலிப்பு நோய் பாதிக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

21 வயதான இளம் பாடகர் திடீரென மரணம் அடைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாடகரின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com