\
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில் விக்ரமசிங்கே
Published on

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இந்த ராஜினாமா தொடர்பான கடிதத்தை ரணில் விக்ரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com