Rajnath singh said Op Sindoor Just Trailer Every Inch Of Pak Now Within BrahMos Range
Rajnath singh said Op Sindoor Just Trailerpt web

"OP சிந்தூர் வெறும் ட்ரெய்லர் தான்.." - இந்தியா பகிரங்க எச்சரிக்கை!

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர் தான், பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் உள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

விழா ஒன்றில் இந்தியாவுடனான மோதல் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர், "அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதேசமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்" என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை குறிப்பிடாமல் அவர் பகிரங்க எச்சரிக்கையை விடுத்தார்.

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையின் உற்பத்தி மையத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,"பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல; அது இந்தியாவின் உள்நாட்டு வலிமைக்கு ஒரு சான்றாகும்.

பிரம்மோஸ் நமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முதுகெலும்பாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான். ஆனால் அந்த டிரெய்லரில் கூட இந்தியாவின் திறன்களின் அளவை பாகிஸ்தானுக்கு உணர்த்தியது. இந்தியா பாகிஸ்தானை உருவாக்க முடிந்தால், அது வேறு என்ன செய்ய முடியும் என்பதை நான் மேலும் விவரிக்க வேண்டியதில்லை" என சூசகமாக கூறி எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, விழா ஒன்றில் இந்தியாவுடனான மோதல் குறித்து பேசியிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர், "அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதேசமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்" என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை குறிப்பிடாமல் அவர் பகிரங்க எச்சரிக்கையை விடுத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com