முகநூல் நட்பு: மதம் மாறி பாகிஸ்தான் நண்பரை மணந்தார் ராஜஸ்தான் பெண்!

பாகிஸ்தானுக்குச் சென்ற இந்திய பெண் அஞ்சு, அந்நாட்டு நஸ்ருல்லாவை திருமணம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அஞ்சு, நஸ்ருல்லா
அஞ்சு, நஸ்ருல்லாட்விட்டர்

மணிப்பூர் பற்றிய செய்திகள் ஒவ்வொருவருடைய மனதையும் பாதித்து வரும் நிலையில், மறுபக்கம் காதலுக்காக பாகிஸ்தான் பெண் இந்தியா வந்த கதையும், இந்தியப் பெண் பாகிஸ்தான் சென்ற கதையும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Sachin, Seema Haider
Sachin, Seema HaiderPTI

பாகிஸ்தான் டூ இந்தியா காதல் கதை!

ஆன்லைன் விளையாட்டு மூலம் அறிமுகமாகி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரைக் காண்பதற்காக சட்டவிரோதமாக, தன்னுடைய 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இங்கு வந்த அவர், இந்திய மதத்திற்கு மாறி இளைஞர் சச்சினை மணந்துகொண்டு, இல்வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில், சீமா ஹைதர் பற்றி பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், அவர் உத்தரப்பிரதேச விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் காதல் கதை ஓய்வதற்குள், இதேபோன்ற இன்னொரு கதை அதே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் பெண் பாகிஸ்தான் பயணம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்து, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்துவந்தவர் அஞ்சு. இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு அர்விந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அப்படியான நிலையில், அஞ்சுவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலமாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், சில தினங்களுக்கு முன் அஞ்சு தன் குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

திருமணத்தை மறுத்த பாகிஸ்தான் நஸ்ருல்லா!

இதுதொடர்பாக, சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கின. இதையடுத்து, அஞ்சுவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், அஞ்சுவும் நஸ்ருல்லாவும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக வதந்திகள் பரவின. இதுகுறித்துப் பேசிய நசருல்லா, “எங்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அவரின் (அஞ்சு) ஒரு மாத கால விசா முடிந்ததும் இந்தியா திரும்பிவிடுவார்” என தெரிவித்திருந்தார்.

”இந்தியா திரும்பிவிடுவேன்” - அஞ்சு

பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகளும், “அஞ்சு ஒரு மாத கால விசாவில்தான் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அவர் அங்கு சில நாட்கள் தங்க விரும்புவதாக கூறியுள்ளார். நஸருல்லாவை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் இங்கு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக அஞ்சு வெளியிட்டிருந்த வீடியோவில், “2-3 நாட்களில் மீண்டும் இந்தியா திரும்பிவிடுவேன். தயவுசெய்து எனது குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவர்களிடம் கேள்விகள் எதுவும் கேட்காதீர்கள்” என விளக்கமளித்திருந்தார்.

அஞ்சு, நஸ்ருல்லா
முகநூல் நட்புக்காக பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண்! விடாமல் தொடரும் சர்ச்சை!

”என் மகளுக்கு மனநிலை பாதிப்பு இருந்தது”!

இந்த விவகாரம் தொடர்பாக அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், “அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான செயல்களைச் செய்து வந்தார். எனவே, நான் அவரைக் கண்டுகொள்வது கிடையாது. அவர், மனஉளைச்சலில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் எப்போது பாகிஸ்தான் சென்றார் என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறியிருந்தார்.

அஞ்சு, நஸ்ருல்லா
“என் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்” - முகநூல் நண்பரை தேடி பாகிஸ்தான் சென்ற பெண்ணின் தந்தை அதிர்ச்சி!

மதம் மாறி நஸ்ருல்லாவை திருமணம் செய்த அஞ்சு!

இதற்கிடையே அஞ்சுவும் நஸ்ருல்லாவும் நேற்று (ஜூலை 25) திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது ’பாத்திமா’ என்ற புதிய பெயரை அஞ்சு வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணமும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல்திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களுடைய திருமணத்தை மேல்திர் மாவட்ட மூத்த காவல் அதிகாரி முஹம்மது வஹாப் என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருமணத்தை உறுதிப்படுத்திய போலீசார்!

இதுகுறித்து அவர், "நஸ்ருல்லா மற்றும் அஞ்சுவின் திருமணம் இன்று (ஜூலை 25) சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு முறையான நிக்காஹ் நடத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினரின் கூற்றுப்படி, அஞ்சு மற்றும் நஸ்ருல்லா, அவருடைய குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் மேல்தீர்வில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கருத்தைப் பதிவு செய்த அஞ்சு!

அஞ்சுவும், நஸ்ருல்லாவும் சொந்த விருப்பத்தின் பேரில் நிக்காவில் கையெழுத்திட்டதாக அறிக்கை அளித்துள்ளனர். மேலும், “நான் விருப்பத்துடனேயே பாகிஸ்தானுக்கு வந்துள்ளேன். இங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என அஞ்சு நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

(தகவல் உதவி: தி இந்து)

வேதனையைக் கொட்டிய அஞ்சுவின் தந்தை!

அஞ்சுவின் திருமணம் குறித்துப் பேசிய அவருடைய தந்தை கயா பிரசாத் தாமஸ், "இரண்டு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு அஞ்சு சென்ற விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இதைச் செய்ய வேண்டுமானால் முதலில் தன் கணவனை அவர் விவாகரத்து செய்திருக்க வேண்டும். தனது குழந்தைகள் மற்றும் கணவரின் எதிர்காலத்தை அவர் அழித்துவிட்டார். எங்களை பொறுத்தவரை அஞ்சு இனி உயிருடன் இல்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com