கோபத்தில்கத்துவது, அடித்து நொறுக்குவது|நடுக்காட்டில் பெண்களுக்கான விநோத சடங்கு! US-ல் நியூ டிரெண்ட்!

தங்களின் கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்த அமெரிக்காவில் டிரெண்டாகி வரும் விநோத சடங்கு. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது.
ரேஜ் சடங்கு
ரேஜ் சடங்குமுகநூல்

தங்களின் கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்த அமெரிக்காவில் டிரெண்டாகி வரும் விநோத சடங்கு. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது.

கோபம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகள் மிகவும் ஆபத்தான ஒன்று. இதனை வெளிப்படுத்தினாலும் ஆபத்துதான், வெளிப்படுத்தாமல் இருந்தாலும் அபத்துதான். இதனை கட்டுக்கொள் வைத்து கொள்ள தியானம், யோகா என பல வகையான முன்னெடுப்புகளை பலரும் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், ’இதெல்லாம் வேண்டாம், இத பண்ணுங்க’ என்பதை போல சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ரேஜ்’ என்ற சடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரேஜ் சடங்கு

பொதுவாக இந்த சடங்கில், அதிக கோபம், ஆத்திரம் கொண்டவர்கள் பங்கேற்கிறார்கள். காடுகளின் நடுவில் நடக்கும் இந்த சடங்கில், கோபத்தை அடிக்கி வைத்துள்ள ஒருவர், தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, கத்துவது முதல் பொருட்களை உடைப்பது, குச்சிகளை கொண்டு தரையில் அடிப்பது என்று மனதில் வைத்திருக்கும் தங்களின் கோபத்தையும், ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

குறிப்பாக பெண்களுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சடங்கில், ஆயிரக்கணக்கான டாலர்களை பயன்படுத்தி பெண்கள் பங்கேற்கிறார்களாம். இப்படி, கோபத்தை வெளிப்படுத்திய பிறகு தங்களுக்கு மனநிம்மதி கிடைப்பதாக ஏராளமான பெண்களும் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமிபத்திய அறிக்கையின் படி, சமூக வலைதளங்களில் பிரபலமான சைபர் செக்யூரிட்டி இன்ஜினியர் மியா மஜிக் என்பவர்தான் இந்த விநோத சடங்கினை ஏற்பாடு செய்துள்ளார்.

ரேஜ் சடங்கு
3 நாட்களில் மரணம்.. புதிய வைரஸைக் கண்டுபிடித்த சீனா. அச்சத்தில் உலக நாடுகள்!

இது குறித்து தெரிவித்த மியா ”கோபமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ இருக்க வேண்டாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஆண்கள் அழுவது மிகவும் முக்கியம், ஏனென்றால் அவர்கள் கண்ணீரை அடக்குகிறார்கள், அது நல்லதல்ல. இதேபோல், பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடிக்கடி அடக்குகிறார்கள். பெண்கள் தங்களின் கோபத்த வெளிப்படுத்த இங்கே வருகிறார்கள்.

அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த தங்களுக்கு தோன்றுவதை யெல்லாம் போட்டு உடைப்பது, தரையில் குச்சிகளால் அடித்து நொருக்குவது, அதிக சத்தத்துடன் கத்துவது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதன் மூலம், அவர்களின் மனதில் இருக்கும் கோபம், ஆக்ரோஷம் குறைந்து , மனதிற்குள் நிம்மதி பிறக்கிறது. இதன் பின்னர் அவர்கள் நிம்மதியடைகிறார்கள். ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக தங்கும் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம், இதில் கலந்து கொள்ள 7000 - 8000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம் வரை செலவு செய்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ரேஜ் சடங்கு
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ISIS ஆதரவு அமைப்பு அச்சுறுத்தல் - பாதுகாப்பு அதிகரிப்பு

மேலும், அமெரிக்காவை சேர்ந்த உளவியலாளர் இது குறித்து தெரிவிக்கையில், இதனை மருத்துவ அறிவியல் என்றும் இதை செய்பவர்களுக்கு சந்தோஷமாக இருப்பதற்கான திறன் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் கலந்து கொண்ட கிம்பர்லி ஹெல்ம்ஸ் என்ற பெண், ”பெண்கள் இப்படி கோபப்படுவதை எங்கும் பார்க்க முடியாது. இந்த விருந்தில் கலந்து கொண்ட நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இந்த விநோத சடங்கு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com