\
ராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள்: விழாக்கோலம் பூண்டது பக்கிங்காம் அரண்மனை!

ராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள்: விழாக்கோலம் பூண்டது பக்கிங்காம் அரண்மனை!

ராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள்: விழாக்கோலம் பூண்டது பக்கிங்காம் அரண்மனை!
Published on

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை அடுத்து, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை விழாக் கோலம் பூண்டுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு லண்டன் ராயல் ஆல்பர்ட் அரங்கில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இதில் ராணி உள்பட அரச குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றதாகவும் பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகிறது. முதலில் ஏப்ரல் 21 ஆம் தேதியும், பின்னர் ஜூன் மாதமும் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் கடந்த 1784 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று காமன்வெல்த் நாடுகளின் தலைவராக தனது மகனான இளவரசர் சார்லஸை, ராணி எலிசபெத் நியமித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com