ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: என்னென்ன சடங்குகள்? - முழு விபரம்

ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: என்னென்ன சடங்குகள்? - முழு விபரம்
ராணி எலிசபெத் உடல் இன்று அடக்கம்: என்னென்ன சடங்குகள்? - முழு விபரம்

இங்கிலாந்தில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவரான இரண்டாம் எலிசபெத் (96), ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி காலமானார். அவரின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று நடைபெறுகிறது. அது குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே...

* இன்று காலை 6.30 மணியுடன்  ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு தொடர்பான சடங்குகள் தொடங்கி உள்ளன.

* ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகின்றன. இந்த சடங்குகள் சரியாக 1 மணி நேரம் நீடிக்கும் என தெரிகிறது.

* 57 வருடங்களுக்கு பிறகு லண்டனில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிற இறுதிச்சடங்கு இதுதான். கடைசியாக 1965ம் ஆண்டு, போர்க்கால பிரதமராக விளங்கி மறைந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு நடந்தது.

* ராணியின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள், மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். ரஷ்யா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

* ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் காண்பிக்கப்படும். அதே நேரத்தில் பூங்காக்கள், சதுரங்கள் மற்றும் கதீட்ரல்கள் மிகப்பெரிய சடங்கு நிகழ்வுக்கான காட்சி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

* ராணி எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச்செல்லப்படுகிறது. அதனுடன் மன்னர் சார்லசும், இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் செல்கிறார்கள்.

* இறுதியாக ராணியின் உடல் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும். இறுதியில், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க பிரார்த்தனை, மன்னர் 6-ம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடக்கிறது.

* ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

* ராணியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்த பிறகு ஒரு வாரத்திற்கு இங்கிலாந்து அரச குடும்பம் துக்கம் அனுசரிக்கப்படும்.

* இறுதிச்சடங்கு நிகழ்வையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்கப்பட்ட ராணி எலிசபெத்தின் உயில்; ஏன் தெரியுமா? - சுவாரஸ்ய பின்னணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com