சுதந்திரமான வாழ்க்கையை வாழ ஹாரி- மேகன் தம்பதிக்கு அனுமதி

சுதந்திரமான வாழ்க்கையை வாழ ஹாரி- மேகன் தம்பதிக்கு அனுமதி

சுதந்திரமான வாழ்க்கையை வாழ ஹாரி- மேகன் தம்பதிக்கு அனுமதி
Published on

அரச குடும்ப பொறுப்புகளை துறந்து சுதந்திரமான வாழ்க்கை வாழ இ‌ளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார்.

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகையான மேகனுக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அரசு குடும்ப நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருந்த ஹாரி - மேகன் தம்பதி, பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர். தங்கள் தேவைக்காக பணிக்கு செல்வதாகவும் கூறினர்.

இது தொடர்பாக மகாராணி எலிசபெத், இளவரசர் ஹாரி மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து மகாராணி பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அரச குடும்ப பொறுப்புகளை துறந்து சுதந்திரமான வாழ்க்கை வாழ இ‌ளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் போல புதிய வாழ்வை அமைத்து கொள்ள தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com