``உக்ரைன் வான்பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தால்....”- ரஷ்ய அதிபரின் அடுத்த எச்சரிக்கை

``உக்ரைன் வான்பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தால்....”- ரஷ்ய அதிபரின் அடுத்த எச்சரிக்கை
``உக்ரைன் வான்பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தால்....”- ரஷ்ய அதிபரின் அடுத்த எச்சரிக்கை

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் நாடுகள், ரஷ்யாவுடன் மோதுபவர்களாக கருதப்படுவர் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு நாட்டின் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக சில நாடுகள் அறிவித்தால், அப்பகுதியில் எந்த விமானங்களும் பறக்கக்கூடாது. அந்த அறிவிப்பை மீறி, அத்துமீறி பறக்கும் விமானங்களை அந்நாடுகள் சுட்டு வீழ்த்த முடியும். இதை முன்வைத்து, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேட்டோ அமைப்பிடம் தங்கள் நாட்டின் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை கோரி, கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க அவர் இதை கேட்டிருந்தார். இதை ஏற்க நேட்டோ மறுத்துவிட்டது.

மறுப்பு குறித்து நேட்டோ தலைவர் ஸ்டோலன்பெர்க் பேசுகையில், “உக்ரைன் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கும்பட்சத்தில், அது ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும்” என தெரிவித்தார். இந்நிலையில் “உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கும் நாடுகள், எங்களுடன் நேரடியாக மோதுபவர்களாக கருதப்படும்” என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். விமானப் படையின் பெண்கள் பிரிவினரிடையே பேசிய புடின், “ரஷ்யாவில் தற்போது ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் நிலை இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com