பிரான்ஸ் அதிபரை தொலைவில் வைத்து விளாடிமிர் புதின் உரையாடியது ஏன்? - சர்ச்சை ஆன புகைப்படம்

பிரான்ஸ் அதிபரை தொலைவில் வைத்து விளாடிமிர் புதின் உரையாடியது ஏன்? - சர்ச்சை ஆன புகைப்படம்
பிரான்ஸ் அதிபரை தொலைவில் வைத்து விளாடிமிர் புதின் உரையாடியது ஏன்? - சர்ச்சை ஆன புகைப்படம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நீண்ட தொலைவில் வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உரையாடியது ஏன் என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் ரஷ்யா தனது ராணுவத் துருப்புகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா படையெடுக்கும் என்கின்ற சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பல உலக நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த திங்கள்கிழமை மாஸ்கோவுக்கு சென்று புதினை சந்தித்து பேசினார். அப்போது, வழக்கத்துக்கு மாறாக நீண்ட மேஜையில் ஒருபுறத்தில் மேக்ரானை அமர வைத்து, அதற்கு மறுபுறத்தில் விளாடிமிர் புதின் அமர்ந்து உரையாடினார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேக்ரானை புதின் வேண்டுமென்றே அவமானப்படுத்தியுள்ளார் என பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை யார் பார்க்க வந்தாலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கொரோனா பரிசோதனைக்கு மறுத்து விட்டார். அதன் காரணமாகவே, அவரை 6 மீட்டர் நீளம் கொண்ட மேஜையின் ஒருமுனையில் அமர வைத்து புதின் உரையாடினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com