பாக். பஞ்சாப் மாகாண முதல்வர் வீட்டருக்கே தற்கொலைப் படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழப்பு

பாக். பஞ்சாப் மாகாண முதல்வர் வீட்டருக்கே தற்கொலைப் படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழப்பு

பாக். பஞ்சாப் மாகாண முதல்வர் வீட்டருக்கே தற்கொலைப் படை தாக்குதல்.. 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரும், பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப்பின் லாகூர் வீட்டருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

போலீசாரும், லாகூர் நகராட்சி நிர்வாகமும் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. லாகூரில் ஷாபாஸ் ஷெரீபின் வீட்டின் அருகே உள்ள அர்ஃபா கரீம் டவர் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப் படை தாக்குதல் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக லாகூர் போலீஸின் தலைமை அதிகாரி அமின் வெய்ன்ஸ் தெரிவித்தார். தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com