உலகம்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-காக 76 முறை ஒலிக்கப்பட்ட மணிகள்!
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-காக 76 முறை ஒலிக்கப்பட்ட மணிகள்!
மறைந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-ன் இறுதிச் சடங்கு லண்டனில் நடந்தது.
ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளராக இருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து செயிண்ட் மேரி தேவாலயத்துக்கு, அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அவர் வாழ்ந்த ஒவ்வொரு ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்பட்டது.
அல்லி மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்கள் அவரது சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.