ஈராக்கில் இருந்து ஐஎஸ் முற்றிலுமாக வெளியேற்றம்: மக்கள் கொண்டாட்டம்

ஈராக்கில் இருந்து ஐஎஸ் முற்றிலுமாக வெளியேற்றம்: மக்கள் கொண்டாட்டம்

ஈராக்கில் இருந்து ஐஎஸ் முற்றிலுமாக வெளியேற்றம்: மக்கள் கொண்டாட்டம்
Published on

ஈராக்கில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக பிரதமர் அல் அபாதி அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து ஈராக் முற்றிலுமாக விடுவிக்கப்பட்ட வெற்றி, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈராக் மீண்டும் செழிப்பான நாடாக உருவெடுக்கும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் முன்னேற்றத்தை நோக்கிய பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஈராக்கில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக விரட்டப்பட்டுவிட்டதாக பிரதமர் அல் அபாதி கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலுமாக வெளிற்றப்பட்டதை பாக்தாத் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பாக்தாத் வாசி ஒருவர் கூறிம்போது, எனக்கு மட்டுமல்ல, என் குடும்பத்தினர், எனது குழந்தைகள் என அனைவருக்குமே இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. ஈராக் மக்களுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com