ஜார்ஜ் பிளாய்ட் கொலை; பற்றி எரியும் அமெரிக்கா: அதிபர் மீது குவியும் கண்டனங்கள்!

ஜார்ஜ் பிளாய்ட் கொலை; பற்றி எரியும் அமெரிக்கா: அதிபர் மீது குவியும் கண்டனங்கள்!
ஜார்ஜ் பிளாய்ட் கொலை; பற்றி எரியும் அமெரிக்கா: அதிபர் மீது குவியும் கண்டனங்கள்!

அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது

கோபடைந்த மக்கள் கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் போராடுகிறார்கள். இது சாதாரண போராட்டம் அல்ல, 1968-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு எப்படிக் கொந்தளித்ததோ, அந்த அளவுக்கு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் முதல் வெள்ளை மாளிகை வரை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இன வெறுப்பை அமெரிக்க அரசு கண்டிக்காமல் போராடுபவர்களை ரவுடிகள் போல பார்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கர்கள், அதிபர் ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். 32 கோடி மக்கள் உள்ள அமெரிக்காவில் 13% மட்டுமே கறுப்பின மக்கள் உள்ளனர். இதனால் அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்தை வரும் தேர்தலுக்கான கணக்காகவே பார்க்கிறார். அதனால் தான் ட்ரம்ப் வெள்ளை இனவாதக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மேலும், அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதே அரசின் தலையாயப் பணியாக இருக்கும். அமெரிக்காவைப் பொருத்தவரை, மிக வலுவான அரசு கட்டமைப்பு உள்ளது. ஆனால் மக்களின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்ட தலைவர் இல்லை என போராட்டக்காரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com