\
இலங்கை - கோத்தபய ராஜபக்சே வருகையைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

இலங்கை - கோத்தபய ராஜபக்சே வருகையைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

இலங்கை - கோத்தபய ராஜபக்சே வருகையைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்
Published on: 

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காணாமல் போனவர்களுக்காக நீதி கேட்டும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், தனியாக வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக் கழகமாக அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்காக வவுனியா வருகை புரிந்த அதிபரைக் கண்டித்து, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்டு அவர்களது உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com