\
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த போராடி வரும் தமிழக இளைஞர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ் குடும்பங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐஃபில் கோபுரம் முன் கூடிய பாரிஸ் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டாவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com