\
ஜல்லிக்கட்டிற்காக தைவானில் தமிழர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டிற்காக தைவானில் தமிழர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டிற்காக தைவானில் தமிழர்கள் போராட்டம்
Published on

தைவான் நாட்டின் தைபேய் நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த இந்திய மற்றும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கடிதம் ஒன்றை இந்தியப் பிரதமருக்கு அங்குள்ள தூதரகம் வழியாக அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமல்லாது தைவானில் வசிக்கும் பிற இந்தியர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காகப் போராடி வரும் தமிழக இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com