அனிதா மரணம்: நியூஜெர்சியிலும் போராட்டம்

அனிதா மரணம்: நியூஜெர்சியிலும் போராட்டம்

அனிதா மரணம்: நியூஜெர்சியிலும் போராட்டம்
Published on

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் போராட்டம் நடைபெற்றது. 

நியூஜெர்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்க‌ளைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இதில் பங்கேற்றனர். மாணவி அனிதாவின் புகைப்படத்தைக் கொண்ட பதாகைகளை வைத்திருந்த அவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். 

இந்தப் போராட்டத்தின்போது மாணவி அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com