“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்!” - ‘தி ராக்’ டுவைன் ஜான்சன்

“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்!” - ‘தி ராக்’ டுவைன் ஜான்சன்
“மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்!” - ‘தி ராக்’ டுவைன் ஜான்சன்

தொழில்முறை மல்யுத்த வீரரும், ஹாலிவுட் சினிமா நடிகருமான டுவைன் ஜான்சனை பலருக்கும் ‘தி ராக்’ என சொன்னால்தான் தெரியும். அவர் அண்மையில் ஒரு பத்திரிகை நிறுவனத்துடனான பேட்டியில், மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தயார் எனத் தெரிவித்துள்ளார். இருந்தாலும் தனக்கு மக்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

“அமெரிக்காவைவும், அதன் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது  எனது குறிக்கோள். எனது குறிக்கோளை மக்களும் விரும்பினால் நிச்சயம் நான் அதை தயங்காமல் செய்வேன்” என அவர் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் அவர் எந்த கட்சிக்காக போட்டியிடுவார் என்பது குறித்த விவரங்கள் ஏதும் அவர் சொல்லவில்லை. 

அமெரிக்காவில் செலிபிரிட்டிகள் அரசியல் களத்தில் தடம் பதிப்பது புதிதல்ல. அர்னால்ட், ரொனால்ட் ரீகன், ட்ரம்ப் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com