சாப்பிட வந்த கனடா பிரதமர்... பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் செய்த சம்பவம்

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியதால் நட்சத்திர உணவகம் ஒன்றிலிருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறினார்.
Canadian Prime Minister Justin Trudeau
Canadian Prime Minister Justin Trudeaupt desk

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைபாட்டை எடுத்திருந்தார். இந்நிலையில் கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாட்டை எதிர்த்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

gaza
gazafile image

இந்நிலையில் வான்கூவர் உணவகம் ஒன்றில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். “இனப் படுகொலைக்கு துணை போகிறீர்கள், உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது” என ட்ரூடோவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதனால் ஜஸ்டீன் ட்ரூடோ உணவகத்திலிருந்து அவசரமாக வெளியேறினார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com