\
இளவரசி டயானா கடிதங்கள் ஏலம்

இளவரசி டயானா கடிதங்கள் ஏலம்

இளவரசி டயானா கடிதங்கள் ஏலம்
Published on

இளவரசி டயானா எழுதிய சில முக்கியம் வாய்ந்த கடிதங்கள் ஏலம் விடப்போவதாக பிரபல இங்கிலாந்து ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.  

இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா குறித்த சர்ச்சைகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்க்க முடியாத புதிர்களாகவே உள்ளன. புகைப்படக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் போது அதிவேகமாக சென்ற கார் விபத்திற்குள்ளானதில் டயானா மரணமடைந்தார். இதற்கு முன்பாக அவர், தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நெருக்கியவர்களுக்கும் பல கடிதங்களை எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களை தற்போது சேகரித்து வைத்துள்ள பிரபல ஏல நிறுவனம் ஒன்று, அவற்றை விரைவில் ஏலத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது. சுமார் 33 கடிதங்கள் ஏலம் விடப்படவுள்ள நிலையில், அவை அனைத்தும் 80 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com