இளவரசி டயானா டாக்குமென்டரி: வெளிவந்தது ரகசியம்!

இளவரசி டயானா டாக்குமென்டரி: வெளிவந்தது ரகசியம்!

இளவரசி டயானா டாக்குமென்டரி: வெளிவந்தது ரகசியம்!
Published on

மறைந்த இளவரசி டயானா பற்றிய புதிய டாக்குமென்டரி நாளை வெளியிடப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்தவர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள். 1997-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த விபத்தில் டயானா உயிரிழந்தார். அவரது 20-ம் ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம்
வரவுள்ளது. இதையடுத்து, டயானா தொடர்பான புதிய டாகுமென்டரி நாளை வெளியிடப்படுகிறது.  

’இதில், டயானா பற்றி இதுவரை வெளிவராத பல ரகசியங்கள் இடம்பெற்றிருக்கிறது. டயானா விபத்தில் பலியாகும் முன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் உள்பட பலவற்றை இதில் பதிவு செய்துள்ளோம். டயானா நகைச்சுவை உணர்வு பெற்றவர். அவரது வாழ்க்கையை அவரது
மகன்களை தவிர வேறு யாரும் சரியாகச் சொல்லிவிட முடியாது. இந்த படத்தை தனது மகன்களுக்கு காண்பித்த இளவரசர்கள் பிரின்ஸ் மற்றும் ஹாரி, ’இவர்தான் உங்கள் பாட்டி’ எனக்கூறி பெருமைப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார் இதன் தயாரிப்பாளர் நிக் கெண்ட்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com