\
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார் இங்கிலாந்து இளவரசர்..!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார் இங்கிலாந்து இளவரசர்..!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார் இங்கிலாந்து இளவரசர்..!
Published on: 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இறப்பு எண்ணிக்கையானது 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் அந்தந்த நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சார்லஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முழுமையாகக் குணமடைந்திருந்தாலும் சமூக விலகலைக் கடைபிடிக்க போகிறேன். கொரோனா வைரஸ் மிகவும் கொடுமையாக இருந்தது. என்னை சுற்றியும் கடுமையான சூழ்நிலை நிலவியது. இருப்பினும் மருத்துவ பணியாளர்கள், திறமைமிகுந்த நபர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் நான் மீண்டு வந்துள்ளேன். அவர்களுக்கு எனது நன்றிகள்” என்று அவர் கூறியுள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com