நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு

நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு

நேபாளத்தின் லும்பினியில் உள்ள மஹா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.

நேபாள நாட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றடைந்தார். நேபாளத்தின் லும்பினி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்குப் பயணம் செய்தார். பிரதமருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் சென்றிருந்தனர். கோவில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள குறியீட்டுக் கல்லுக்கு இருநாட்டு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். இது பகவான் புத்தரின் மிகச்சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும். புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் அவர்கள் பங்கேற்றனர். ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றி வைத்தனர்.

இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுக்கு இரு பிரதமர்களும் நீர் வார்த்தனர். ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர். மேலும் இந்திய சர்வதேச மையத்தில் பூமி பூஜை நிகழ்ச்சிகளும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com