\
Presidential candidate Jean-Luc Mélenchon said France exit the Euro?
France exit the Euro? Reuters

யூரோவில் இருந்து வெளியேறுமா பிரான்ஸ்? அதிபர் வேட்பாளர் பேச்சால் அதிரும் ஐரோப்பா! பின்னணி என்ன?

யூரோவில் இருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்துவேன் என பிரான்சின் முக்கிய அதிபர் வேட்பாளர் கூறியுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

கடந்த 2024-ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரானின் 'என்சம்பிள்' (Ensemble) கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணியாக புதிய மக்கள் முன்னணி (NFP) அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதே நேரம் இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேஷனல் ரேலி (National Rally) அதிக வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.

Jean-Luc Mélenchon
Jean-Luc MélenchonReuters

இந்த சூழலில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தீவிர பிரச்சாரம் தற்போதில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடம் பிடித்ததால் இந்த முறை அதிபர் பதவியை கைப்பற்ற இடதுசாரிகள் தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கூட்டணியில் தீவிர இடதுசாரி என அறியப்படும் ஜீன்-லூக் மெலென்சோன் (Jean-Luc Mélenchon) கூட்டணியில் இருக்கும் தலைவர்களிலேயே வலுவான வேட்பாளராக கருதப்படுகிறார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 21.95% வாக்குகளைப் பெற்ற இவரின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இவர் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனிடையே இவர் பிரான்ஸ் தலைவர் பாரிஸின் வடக்குப் புறநகர்ப் பகுதியான லெ பூர்ஜேவி பகுதியில் ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்தார். 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த பேரணியின் முடிவில் மெலென்சோன் உரையாற்றினார்.

EURO
EUROReuters

அப்போது பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அவர், தான் அதிபரானால் ஐரோப்பிய மத்திய வங்கியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரான்ஸ் தனது சொந்தப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவேன் என்றும், இதற்காக யூரோ நாணயத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதற்கு பிற ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவிக்காவிட்டால் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ நாணய மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான பிரான்ஸ், யூரோ நாணயத்தின் வலிமைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில், பிரான்சும் அதில் இருந்து வெளியேறினால் யூரோவில் மதிப்பு சர்வதேச அளவில் கடுமையாக சரியும். இந்த நாணய சரிவை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடுகளால் சமாளிக்க முடியாது என்பதால் அந்த நாடுகள் மெலென்சோவின் கருத்தால் கடும் அச்சம் அடைந்துள்ளன.

Presidential candidate Jean-Luc Mélenchon said France exit the Euro?
அதிவேகத்தில் மோதிக்கொண்ட ரயில்கள் : தூக்கிவீசப்பட்ட பெட்டிகள்.. 100+ பயணிகளின் நிலை என்ன?