உலகம்
ஏவுகணை சோதனையை பார்வையிட்ட அதிபர் - ஹாலிவுட் ஸ்டைலில் வீடியோ தயாரித்து வெளியிட்ட வடகொரியா
ஏவுகணை சோதனையை பார்வையிட்ட அதிபர் - ஹாலிவுட் ஸ்டைலில் வீடியோ தயாரித்து வெளியிட்ட வடகொரியா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதால் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கும் வடகொரியா அரசு, கிம் ஜாங் உன்னை, புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்களை போல கிம் ஜாங் உன்னுக்கு பிரம்மாண்ட எண்ட்ரி கொடுத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்யும்போது கிம் ஜாங் உன் அதனை நேரில் பார்வையிட்டுள்ளார். அப்போது சன் கிளாஸ் அணிந்து அவர் நடைபோடும் காட்சியை எடுத்து, நாட்டின் பாதுகாவலர் என்ற பெயரில் வடகொரியா அரசு ஊடகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.