நாட்டில் மிகப்பெரிய அரசியல் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஓய்வெடுப்பதற்காக நியூஜெர்சி நகருக்குச் சென்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அங்கு 17 நாள்கள் தங்கியிருந்து அவர் ஓய்வெடுப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அதிபர் தேர்தலில், ட்ரம்புக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டது எனக் கூறப்படும் விவகாரம் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பல நிலைகளிலும் விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் அவர் ரெஸ்ட் எடுக்கச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.