அடுத்த அதிபர் வேட்பாளரும் சிறிசேனா தான்: சொல்கிறார் மூத்த எம்பி!

அடுத்த அதிபர் வேட்பாளரும் சிறிசேனா தான்: சொல்கிறார் மூத்த எம்பி!
அடுத்த அதிபர் வேட்பாளரும் சிறிசேனா தான்: சொல்கிறார் மூத்த எம்பி!


ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக, பிரதமர் ராஜபக்‌சேவின் ஆதரவுடன் இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராக சிறிசேனாவே களம் இறங்குவார் என இலங்கை சுதந்திர கட்சியின் மூத்த எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர். 

இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றது. ஆனாலும் தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிசேனவிற்கு கிடையாது என்றும்,  தான் தொடர்ந்து பிரதமராக பதவியில் நீடிப்பதாகவும் ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் ரணில் விக்கரமசிங்கே கூறியுள்ளார். 

இலங்கையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் வெவ்வேறு கருத்துகளை கூறி வரும் நிலையில் இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராகவும் சிறிசேனா தான் களம் இறக்கப்படுவார் என இலங்கை சுதந்திர கட்சியின் மூத்த எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், ''ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இலங்கையின் அடுத்த அதிபர் வேட்பாளராக சிறிசேனாவே களம் இறங்குவார். பிரதமராக ராஜபக்‌சே அவருக்கு முழு ஆதரவையும் அளிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com