உலகம்
துப்பாக்கிச்சூட்டில் பலியான 8 மாத கர்ப்பிணி: குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
துப்பாக்கிச்சூட்டில் பலியான 8 மாத கர்ப்பிணி: குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
சிகாகோ நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான எட்டு மாதக் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமை 35 வயதான கர்ப்பிணி பெண் ஒரு மண்டபத்தில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயத்துடன் காணப்பட்டார். அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த, அப்பெண்ணின் வயிற்றிலிருந்த எட்டுமாதக் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது பெருஞ்சோகத்திலும் ஆறுதலாய் அமைந்துள்ளது.
அந்தப் பெண் எதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டார்? யார் சுட்டார்கள் என்பதெல்லாம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறை விசாரித்து வருகிறது. எட்டுமாதக் குழந்தை தற்போது சிகாகோவில் உள்ள காமர் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.