\
Poverty drives Iranians to sell their body Organs
iran reuters

40 பில்லியன் ரியால்.. உடல் உறுப்புகள் விற்பனை.. ’சிறுநீரகத் தெரு’வுக்குள் தள்ளப்படும் மக்கள்!

கடும் வறுமை காரணமாகத் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த முறைகளைத் தாண்டி நேரடியாகத் தெருக்களில் விளம்பரம் செய்து உறுப்புகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரானில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடனை அடைக்கவும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் தொழிலாளர்கள் தங்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்ய விளம்பரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகம் மட்டுமின்றி கல்லீரல் திசுக்கள், எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் விற்பனைக்கு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

ஈரானின் தொழிலாளர் செய்தி நிறுவனமான ILNA (Iranian Labour News Agency) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், iran international உள்ளிட்ட ஊடகங்கள் இதுகுறித்த விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளன.

iran
iranreuters

ILNA வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சில தெருக்களின் சுவர்கள், கட்டடங்கள் மற்றும் இரும்புக் கதவுகளில் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் அருகில் இருப்பதால் இப்பகுதி 'சிறுநீரகத் தெரு' (Kidney Street) என்றே அழைக்கப்படுகிறது

’இந்தத் தெருவில் உடல் உறுப்புகளை விற்க விரும்புவோர் அதிகளவில் குவிகிறார்கள்’ என்று அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது. சிறுநீரகத்திற்கு பொதுவாக 30 முதல் 40 பில்லியன் ரியால்கள் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரிய ரத்த வகையைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களுக்கு 50 பில்லியன் ரியால்கள் வரை கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

iran
iran reuters

உலகிலேயே சிறுநீரக தானத்திற்குப் பணம் வழங்குவதைச் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரே நாடு ஈரான் ஆகும். தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த முறை 1988 முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், கடும் வறுமை காரணமாகத் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த முறைகளைத் தாண்டி நேரடியாகத் தெருக்களில் விளம்பரம் செய்து உறுப்புகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

இதற்கிடையே, அந்நாட்டில் சுமார் 80 லட்சம் பேர் கடுமையான வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் அலி பாபேய் கர்னாமி தெரிவித்துள்ளார். மேலும், 5 கோடி பேர் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Poverty drives Iranians to sell their body Organs
அமெரிக்காவுக்கே ஆட்டம் காட்டிய பாகிஸ்தான்.. ஆதங்கத்தில் ட்ரம்ப்.. ஈரான்தான் காரணமா?