கிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்

கிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்

கிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்
Published on

எளிமை, தொண்டு, அன்பு ஆகியவற்றில் அக்கறை செலுத்த கிறிஸ்துமஸ் தினத்தில் போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். 

கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக, கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் இன்று அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்கள். இந்தப் பண்டிகையை  முன்னிட்டு தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டு ள்ளன.

வாடிகன் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இயே சு கிறிஸ்து ஏழை மக்களுக்காக தோன்றியவர் எனத்‌ தெரிவித்தார். எந்த ஒரு உணவையும் ‌மற்றவர்களுக்கு பகிர்ந்த ளிக்க வேண்டும் என்றும், ஆடம்‌பரம் இல்லாத வாழ்க்கையை அனைவரும் வாழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுப்போம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com