வடகொரியா-அமெரிக்கா இடையே அமைதி நிலவ வேண்டும் - போப் ஃபிரான்சிஸ்
வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அமைதி நிலவ மற்ற நாடுகள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என போப் ஃபிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள போப் ஃபிரான்சிஸ் விமானத்தில் வைத்து சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவிவரும் அணு ஆயுதம், போர் பிரச்னைக்கு மற்ற நாடுகளும் தீர்வு காணவேண்டும் என போப் ஃபிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, வடகொரியா- அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் உருவாகும் சூழலை சரிசெய்ய நார்வே போன்ற பல நாடுகள் உதவ தயாராக உள்ளன. பல நாட்டு தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். போர் மனிதத்தன்மையை அழித்துவிடும் என்று நம்புகிறேன்.
அடுத்த மாதம் ஐரோப்பா வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க தயாராக உள்ளதாகவும் போப் பிரான்சிஸ் கூறினார்.