\
போப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்

போப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்

போப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்
Published on

பெரு நாட்டிற்கு போப் ஆண்டவர் வருகையை ஒட்டி, அதற்கான அதிகாரப்பூர்வ பாடலை உருவாக்கிய சகோதரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸின் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை, பெரு நாட்டு அரசு தேர்வு செய்திருக்கிறது. பாடகர் குயினோஸும் அவரது சகோதரி எலிசபெத்தும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் வரும் ஜனவரி 18 ஆம் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரை பெரு நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து பாடலை உருவாக்கிய எலிசபெத் கூறும்போது, போப் சுற்றுப்பயணத்திற்காக நாம் ஒரு பாடலை உருவாக்கலாம் என்று எனது சகோதரி கூறினார். நாங்கள் பாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். எங்களுடைய பாடல் இவ்வளவு பெரிய இடத்திற்கு செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப்பாடல் பெரு நாட்டு மக்களை அனைவரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com