உலகம்
உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்காக போப் சிறப்பு பிரார்த்தனை
உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்காக போப் சிறப்பு பிரார்த்தனை
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்காக வேண்டி போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற இப்பிரார்த்தனையில் உலகெங்குமிருந்து கத்தோலிக்க பிஷப்புகள் பங்கேற்றனர். கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற 2 உலகப் போர்கள் தந்த கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்துவிட்டதாக போப் தனது பிரார்த்தனையின் போது கவலை தெரிவித்தார்.
உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் இதே பிரார்த்தனை நடைபெற்றது. வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களும் பங்கேற்றாலும் அவர்கள் அரங்கின் எதிரெதிர் முனைகளில் அமர்ந்திருந்தனர்.