முதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்

முதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்

முதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்
Published on

மியான்மர் அகதிகளை சந்தித்த பிறகு போப் பிரான்சிஸ், தனது ஆசிய பயணத்தில் முதல்முறையாக ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

வங்கதேசம் சென்றிருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ், தலைநகர் டாக்காவில் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்தார். மக்கள் நெரிசல் மிகுந்த பல்வேறு சாலைகளையும் அவர் சுற்றிப்பார்த்தார். மக்களைப் பார்த்து கையசைத்த போப் ஆண்டவர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். அங்கிருந்து அனைத்து மதத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு போப் ஆண்டவர் சென்றார். டாக்கா நகரில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாகனமாக சைக்கிள் ரிக்சா விளங்குகிறது.

மேலும், வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மியான்மர் இஸ்லாமியர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்வதாக இருந்தது. பிறகு, ஆசியப் பயணத்தில் முதல் முறையாக ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மியான்மர் சென்ற போது, ரோஹிங்யா என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com