\
பாப் இசை பாடகர் ஜஸ்டின் பைபருக்கு கொரோனா தொற்று

பாப் இசை பாடகர் ஜஸ்டின் பைபருக்கு கொரோனா தொற்று

பாப் இசை பாடகர் ஜஸ்டின் பைபருக்கு கொரோனா தொற்று
Published on

பிரபல பாப் இசை பாடகரான ஜஸ்டின் பைபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க செய்தி நிறுவனமான TMZ வசம் தெரிவித்துள்ளனர் அவரது உதவியாளர்கள். கடந்த சனிக்கிழமை அன்று பைபருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அவர் ‘ஜஸ்டீஸ் வோர்ல்ட் (World) டூரில்’ ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும் தொற்று காரணமாக அதில் சில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட உடன் இந்நிகழ்ச்சி திட்டமிட்டது போல லாஸ் வேகாஸில் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளளர்கள் தெரிவித்துள்ளனர். 

27 வயதான ஜஸ்டின் பைபர் விரைவில் குணம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரார்த்தனை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com