பெரும்பான்மையான இளைஞர்கள் மதத்தை பின்பற்றுவதில்லை: ஆஸி. அரசின் புள்ளிவிவரம்

பெரும்பான்மையான இளைஞர்கள் மதத்தை பின்பற்றுவதில்லை: ஆஸி. அரசின் புள்ளிவிவரம்

பெரும்பான்மையான இளைஞர்கள் மதத்தை பின்பற்றுவதில்லை: ஆஸி. அரசின் புள்ளிவிவரம்
Published on

ஆஸ்திரேலியாவில் 18 - 34 வயதிற்குள் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், மதத்தை பின்பற்றுவதில்லை என ஆஸ்திரேலிய அரசின் புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அதிக அளவிலான மக்கள் குழு, அதாவது 30.1 சதவிகிதம் மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. கத்தோலிக்கர்கள் 22.6 சதவிகிதமாகவும், 13.3 சதவிகிதம் பேர் ஆங்கிலிக்கர்களாகவும் உள்ளனர். பெண்களை விட ஆண்களே கடவுள் மறுப்பாளர்களாகவும், மதம் மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்ற தகவலும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதமில்லை (No Religion) என்பதே ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. 2016-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஏறத்தாழ 31 சதவிகிதம் பேர், மதமில்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் ஹிந்து மதம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1991 கணக்கெடுப்பின்படி, 0.3 சதவிகிதமாக இருந்த ஹிந்து மதத்தவர்கள், 2016 கணக்கெடுப்பின்படி 1.9 சதவிகிதமாக (440,300 நபர்கள்) உயர்ந்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை (ABS) தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச இந்து முகமையின் தலைவர் ராஜன் ஜெத், ஆஸ்திரேலியாவில் ஹிந்து மதம் தொடர்ந்து வளர்ந்து வருவதற்காக, இந்து மதத்தைப் பின்பற்றும் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆன்மாவை நோக்கி தேடல் இருக்கவேண்டும், இளைஞர்களையும் குழந்தைகளையும் ஆன்மீகத்தின் வழியில் திருப்புவதற்கு உதவுங்கள்’ எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com