கருக்கலைப்பு தடைசட்டம்: போராட்டத்தால் நிலைப்பாட்டை மாற்றிய போலந்து ஜனாதிபதி
போலந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதன் காரணமாக சட்டம் பற்றிய தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் போலந்து ஜனாதிபதி
நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து கருக் கலைப்புகளையும் தடைசெய்த தீர்ப்பை ஏற்கெனவே வரவேற்ற போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா, அதன்பிறகு நாடுமுழுவதும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளார். கருவின் பிறவி குறைபாடுகள் காரணமாக கர்ப்பத்தை கலைப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்று போலந்து அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து போலந்து முழுவதும் கடந்த ஏழு நாட்களாக நடந்துவரும் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இப்போது அவர் பேசியுள்ளார். ஏற்கெனவே ஐரோப்பாவின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருக்கலைப்புச் சட்டங்கள் இருப்பதால் தற்போது இந்த தீர்ப்பின் காரணமாக முழுவதுமாக தடைசெய்யப்படும் சூழல் உருவானது.
இந்த எதிர்ப்புகளுக்கு பிறகு பேசிய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா “கருவுற்றிருக்கும் கருவை கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் இத்தகைய செயல்களுக்கு சட்டம் தேவையாக இருக்க முடியாது “என்று அவர் கூறினார்,