உக்ரைனுக்கு வைக்கப்பட்ட குறி: போலந்தில் தவறி விழுந்த ரஷ்ய ஏவுகணை.. 2 பேர் உயிரிழப்பு

உக்ரைனுக்கு வைக்கப்பட்ட குறி: போலந்தில் தவறி விழுந்த ரஷ்ய ஏவுகணை.. 2 பேர் உயிரிழப்பு
உக்ரைனுக்கு வைக்கப்பட்ட குறி: போலந்தில் தவறி விழுந்த ரஷ்ய ஏவுகணை.. 2 பேர் உயிரிழப்பு

நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் மீது ரஷ்யா வீசிய ஏவுகணை வந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில் நேற்று இரு ரஷ்ய ஏவுகணைகள் நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து மீது விழுந்ததாகவும், இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகள் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு போலந்தில் ப்ரெஸ்வோடோவ் என்கிற ஊரை குறிதவறி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து போலந்து பிரதமர் தலைமையில் அவசரமாக பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''போலந்து அதிபர் துடாவிடம் பேசியுள்ளேன். போலந்தின் கிழக்கே மக்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டேன். இந்த தாக்குதல் பற்றிய விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம். அடுத்து எடுக்க வேண்டிய முறையான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய தொடர்ந்து நாங்கள் போலந்துடன் தொடர்பில் இருப்போம்'' என அவர் தெரிவித்து உள்ளார்.

உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு ரஷ்யா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார். ரஷியாவை சேர்ந்த 85 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் இந்த தாக்குதலால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய ஏவுகணை தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: 800 கோடியை எட்டியது உலக மக்கள்தொகை - 2023 ஆம் ஆண்டில் சீனாவை கடக்கும் இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com