”எந்த ஒரு சூழலிலும் ரஷ்யா உடன் போர் தொடங்கலாம்; தாக்குதலை எதிர்கொள்ள தயார்” - போலந்து அறிவிப்பு

உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
ரஷ்யா - போலந்து
ரஷ்யா - போலந்து முகநூல்
Published on

உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது வரை போர் தொடர்ந்து வரும் சூழலில், ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள மற்றொரு நாடான போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ரஷ்யா - போலந்து
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விண்வெளியில் கரைந்த கல்பனா சாவ்லா.. சாதனை மங்கையின் கதை!

இது குறித்து பதிலளித்துள்ள போலந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மத்தேயூஸ் மோராவியஸ்கி ((Mateusz Morawiecki)), ”ரஷ்யாவுடனான போர் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. எந்த ஒரு சூழலிலும் போர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது எந்த அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்று கணித்து வரப்பட்டு வருகிறது. போலந்தில் உள்ள ஆயுதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சராக உள்ளதால் ஒவ்வொரு சொல்லையும் கவனித்தே பேசுகிறேன்.” என்று மத்தேயூஸ் மோராவியஸ்கி ((Mateusz Morawiecki)) தெரிவித்தார்.

ஏற்கனவே, உக்ரைன் - ரஷ்யா போர் உலக அளவில் பெரும் பெருளாதார பிரச்னையை ஏற்படுத்தி வரும் சூழலில், நேட்டோ, ஐரோப்பிய யூனியனில் உள்ள போலந்து உடன் போர் ஏற்பட்டால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com