\
நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
Published on

வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடிக்கு, நவம்பர் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளின்படி, லண்டன் காவல் துறையினர் நீரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட மறுத்ததுடன், நீதிமன்றக் காவலையும் நீட்டித்து வந்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், தற்போது நவம்பர் 11 ஆம் தேதி வரை அவரது நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com