அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்திய-ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மணிலாவில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்ற மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து ஆசியான் வர்த்தக மற்றும் முதலீடு மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். அத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே-வுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சில தலைவர்களையும் பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக மோடி கூறியுள்ளார்.