modi speech in sco summit
modi speech in sco summitweb

’40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா பாதிப்பு..’ பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.
Published on

சீனாவின் டியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, எஸ்.சி.ஓ. என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு, ஆங்கிலத்தில் security, connectivity மற்றும் opportunity அதாவது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு எனக் குறிப்பிட்டு மறுவரையறை செய்தார்.

தியான்ஜின் SCO மாநாடு
தியான்ஜின் SCO மாநாடுweb

தொடர்ந்து பேசிய பிரதமர், 40ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா மிகப்பெரிய பாதிப்புகளைசந்தித்து வருவதாகவும் பிரதமர் மோடிகுறிப்பிட்டார்.

பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய பிரதமர்..

பஹல்காம் தாக்குதலைதனது பேச்சில் சுட்டிக்காட்டிய பிரதமர்மோடி, பயங்கரவாதத்தைவெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார். பயங்கரவாதத்தின் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடுக் கூடாது என்பதை நாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் முன்னிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

தியான்ஜின் SCO மாநாடு
தியான்ஜின் SCO மாநாடு

முன்னதாக மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் எனவெளிப்படையாக குற்றம்சாட்டினார். பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகளையும் புடின் பாராட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com